இலங்கை: வருமானம் குறைவாகவுள்ள குடும்பங்களுக்கு நிதியுதவி
இலங்கையில் வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களை கண்டறிந்து நிவாரணம் வழங்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


இலங்கை: இலங்கையில் வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களை கண்டறிந்து நிவாரணம் வழங்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், உணவுப் பொருள்கள் என அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால், நாடு முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கை அமைச்சரவை கலைக்கப்பட்டு பல்வேறு அரசியல் மாற்றங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களை கண்டறிந்து சிறப்பு நிதியுதவி வழங்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத்தை மே மற்றும் ஜூலை மாதங்களிக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...