2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

'அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு விருப்பமில்லை' - ரஷியா

அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு விருப்பமில்லை என ரஷியாவின் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். 

News image
உக்ரைனின் மரியுபோல் நகரம்
Updated On :18 மே 2022, 12:34 pm

DIN

அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு விருப்பமில்லை என ரஷியாவின் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் மூன்று மாதத்தை எட்டியுள்ளது. போர் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மற்றொருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தையும் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய ரஷியாவின் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், 'உக்ரைனுடனான அமைதிப் பேச்சுக்களில் எந்த அசைவும் இல்லை. மேலும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர உக்ரைனுக்கு விருப்பமில்லை என்றே தோன்றுகிறது. பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோரின் செயல்முறை அவர்களின் விருப்பமின்மையைக் காட்டுகிறது' என்று கூறியுள்ளார். 

ரஷியாவும் உக்ரைனும் தற்போது எந்த முறையிலும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடைமுறையில் இருந்து உக்ரைன் விலகிவிட்டதாகவும் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ கூறியதாக அங்குள்ள செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.