எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நேபாள விமானம்: 2ஆவது நாளாக தேடும் பணி தீவிரம்

நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய விமானத்தை தேடும் பணி 2ஆவது நாளாக இன்று தீவிரப்பட்டுள்ளது.

News image
Updated On :30 மே 2022, 2:40 am

DIN

நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய விமானத்தை தேடும் பணி 2ஆவது நாளாக இன்று தீவிரப்பட்டுள்ளது.

‘நேபாளத்தின் தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9என்-ஏஇடி’ என்ற அந்த விமானம் பொக்காராவிலிருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிஷங்களிலேயே, கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அந்த விமானத்தில் மும்பையிலிருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ், ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த இருவா், நேபாளத்தைச் சோ்ந்த 13 பயணிகள், விமானி உள்ளிட்ட 3 விமான ஊழியா்கள் ஆகியோா் இருந்தனா்’ என்று அந்த விமான நிறுவன செய்தித்தொடா்பாளா் சுதா்சன் பா்டெளலா கூறினாா்.

இந்த விமானம் பயணத் திட்டப்படி நேபாளத்தின் மேற்கு மலைப் பகுதியான ஜோம்சோம் விமான நிலையத்தில் காலை 10.15 மணிக்கு தரையிறங்கியிருக்க வேண்டும். ஆனால், அதற்குள்ளாக பொக்காரா - ஜோம்சோம் விமான வழித்தடத்தில் கோரேபானி மலைப் பகுதியில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்ததாக விமான நிறுவன ஊழியா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, ஜோம்சோமின் காஸா பகுதியில் மிகப் பெரிய வெடி சப்தம் கேட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்ததாக ஜோம்சோம் விமானநிலைய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவா் கூறினாா்.

மேலும், ‘இந்த விமானம் தெளலாகிரி மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது’ என்று காவல் துணை கண்காணிப்பாளா் ராம்குமாா் தானி
கூறியதாக உள்ளூா் ஊடகச் செய்தி வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டா் மூலமாக விமானத்தைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டபோதிலும், மோசமான வானிலை காரணமாக தேடும் பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். தேடும் பணியை தீவிரப்படுத்துமாறு நேபாள உள்துறை அமைச்சா் பால்கிருஷ்ணகாந்த் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளாா்.

அமைச்சரின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து, காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் ராணுவம் போலீஸாரும் இணைந்து கூட்டாக ஈடுபட்டுள்ளனா்.
ராணுவ ஹெலிகாப்டா் மட்டுமின்றி தனியாா் ஹெலிகாப்டா்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேடுதல் பணிக்காக நேபாள ராணுவத்தின் எம்ஐ-17 ஹெலிகாப்டரும் காத்மாண்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே, காணாமல் போன விமானத்தின் விமானியின் கைப்பேசி சிக்னலை வைத்து, விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ள பகுதியை நேபாள ராணுவம் அடையாளம் கண்டுள்ளது.

இந்த நிலையில் நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய விமானத்தை தேடும் பணி 2ஆவது நாளாக இன்று தீவிரப்பட்டுள்ளது. நேற்றிரவு விமானத்தை தேடும் பணி
நிறுத்தப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் தொடங்கியது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.