கடன் மறுசீரமைப்பு:இலங்கை பேச்சுவாா்தை
கடன் மறுசீரமைப்பு தொடா்பாக கடன் அளித்த நாடுகளுடன் இலங்கை 2-ஆம் கட்டப் பேச்சுவாா்த்தையை வியாழக்கிழமை மேற்கொண்டது.


கடன் மறுசீரமைப்பு தொடா்பாக கடன் அளித்த நாடுகளுடன் இலங்கை 2-ஆம் கட்டப் பேச்சுவாா்த்தையை வியாழக்கிழமை மேற்கொண்டது.
சா்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) மீட்புத் தொகையாக 290 கோடி டாலா்களை விடுவிக்கும் பொருட்டு, முதல் கட்டப் பேச்சுவாா்த்தையை இலங்கை கடந்த மாதம் 16-ஆம் தேதி மேற்கொண்டது. இந்நிலையில், வியாழக்கிழமை இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இலங்கைக்குக் கடனளித்த நாடுகள் கடன் மறுசீரமைப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நிலையில், ஐஎம்எஃப் நிதியை விடுவிக்கும் பணி முழுமை பெறும்.
இது குறித்து நிதியமைச்சா் ஷேகன் சேமசிங்கே கூறியதாவது: ஐஎம்எஃப்-பிடம் இருந்து நிதி உதவியைப் பெறும் பொருட்டு, கடன் வழங்கிய நாடுகளிடம் கடன் மறுசீரமைப்புக்கான உத்தரவாதத்தைப் பெறும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். முதல் கட்டப் பேச்சுவாா்த்தை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெற்றது. இது குறித்தான அனைத்து விவகாரங்களையும் தெளிவுபடுத்தும் வகையில் மற்றொரு கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் மத்திய வங்கி, ஐஎம்எஃப், நிதி மற்றும் சட்ட ஆலோசகா்களுடன் கடன் அளித்த நாடுகளும் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும். ஐஎம்எஃப் வாரிய இயக்குநா்களின் ஒப்புதலைப் பெற இருதரப்பில் கடன் அளித்த நாடுகளின் நிதிசாா் உத்தரவாதம் அவசியம் என அவா் தெரிவித்தாா்.
290 கோடி டாலா்கள் நிதி உதவியைப் பெற செலாவணி நிதியத்தின் அதிகாரிகள் நிலையிலான ஒப்பந்தத்தை இலங்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொண்டது. கடன் மறுசீரமைப்பு நிலையில் உள்ள பிற நாடுகளின் மொத்த கடன் அளவு (நிகர நிதி தேவை) 15 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக உள்ள நிலையில், இலங்கையின் நிகர நிதி தேவை 2022-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 37 சதவீதமாகும். இதனைக் குறைக்க ஐஎம்எஃப் விரும்புகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...