
தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரிலிருந்து புகோபா நகரை நோக்கி 39 பயணிகள், 2 விமானிகள் மற்றும் இரண்டு கேபின் பணியாளர்கள் உள்பட 43 பேர் சென்ற விமானம் சுமார் 100 மீட்டர் (328 அடி) உயரத்தில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது சிக்கலை எதிர்கொண்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும்போது விமானம் விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு குழுவினர்.
இதில், 26 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மீட்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விமானம் ஏரியில் விழுந்ததை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் படங்கள் மற்றும் விடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.