மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

‘ஆா்டமிஸ்-1’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

‘ஆா்டமிஸ்-1’ ராக்கெட்டை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

News image
Updated On :16 நவம்பர் 2022, 7:15 am

‘ஆா்டமிஸ்-1’ ராக்கெட்டை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. எரிபொருள் கசிவு காரணமாக 45 நிமிடங்கள் தாமதமாக ‘ஆா்டமிஸ்-1’ விண்ணில் ஏவப்பட்டது.

நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக விண்வெளிக் கலம் அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புதன்கிழமை (நவ. 16) செயல்படுத்தி  உள்ளது.

‘ஆா்டமிஸ்-1’ என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, ராக்கெட் என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.

அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்கான இந்த ஆய்வு திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது. 

அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக் கலம் ஃபுளோரிடா மகாணம், கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், ராக்கெட் எரிபொருள் கசிவு மற்றும் என்ஜின் கோளாறு காரணமாக அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ‘ஆா்டமிஸ்-1’ ராக்கெட்டை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.