டிவிட்டர், முகநூலை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆள்குறைப்பு பணியை தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் 3.5 லட்சம் கோடி கொடுத்து டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலன் மாஸ்க் அந்நிறுவனத்தில் 4 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணியிலிருந்து நீக்கினார்.
இதனைத் தொடர்ந்து, முகநூலின் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் 13 சதவிகிதமாகும்.
இந்த வரிசையில், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமான அமேசானும் தற்போது இணைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
முதல்கட்டமாக, அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யும் பணியை இந்த வாரமே மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் நிறுவனத்தில் சில பணியிடங்கள் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டு, அந்தப் பணியில் இருப்பவர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் காலியாக இருக்கும் வேறு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் இந்தியாவை பொறுத்தவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணிபுரிந்து வரும் நிலையில், எத்தனை பேரை பணி நீக்கம் செய்யலாம் என்ற ஆலோசனை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


