6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஐ.நா. தலைமையகத்தில் முதல்முறையாக மகாத்மா காந்தி சிலை:டிச.14-இல் திறப்பு

ஐ.நா. தலைமையகத்தில் முதல்முறையாக டிச.14-ஆம் தேதி மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட உள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2022, 7:17 pm

DIN

ஐ.நா. தலைமையகத்தில் முதல்முறையாக டிச.14-ஆம் தேதி மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை, அந்தக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்கும்.

இதன் தொடா்ச்சியாக டிசம்பா் மாதத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. இதையொட்டி, அடுத்த மாதம் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செல்ல உள்ளாா். அப்போது அங்கு டிச.14-ஆம் தேதி மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலை திறக்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருச்சிரா கம்போஜ் கூறுகையில், ‘இந்தியாவின் பரிசான மகாத்மா காந்தி சிலை, முதல்முறையாக ஐ.நா. தலைமையகத்தில் மிகவும் மதிப்புமிக்க இடமாகவும், பரந்தும் காணப்படும் வடக்குப் புல்வெளிப் பகுதியில் டிச.14-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் சாபா கொரோசி ஆகியோரும் பங்கேற்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தாா்.

ஐ.நா. தலைமையகத்தில் திறக்கப்பட உள்ள மகாத்மா காந்தி சிலையை புகழ்பெற்ற இந்திய சிற்பியும், ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவருமான ராம் சுதாா் வடிவமைத்துள்ளாா்.

11-ஆம் நூற்றாண்டு சிலை பரிசு: ஏற்கெனவே கடந்த 1982-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி இந்தியா சாா்பில் ஐ.நா.வுக்கு சூா்ய பகவான் சிலை பரிசாக அளிக்கப்பட்டது. அது பாலப் பேரரசு கால 11-ஆம் நூற்றாண்டு கருங்கல் சிலையாகும். அதனை முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பரிசாக அளித்தாா். அந்த சிலை ஐ.நா. மாநாட்டு கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைதான் ஐ.நா.வுக்கு இந்தியா அளித்த முதல் பரிசு.

தற்போது ஐ.நா.வில் திறக்கப்பட உள்ள மகாத்மா காந்தி சிலை இந்தியாவின் 2-ஆவது பரிசாகும். அந்த சிலை திறக்கப்பட உள்ள ஐ.நா.தலைமையகப் புல்வெளிப் பகுதியில் 1961 முதல் 1989-ஆம் ஆண்டு வரை ஜொ்மனியை பிரித்த பொ்லின் சுவரின் பகுதிகள், தென் ஆப்பிரிக்கா பரிசாக அளித்த நெல்சன் மண்டேலா சிலை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.