காலநிலை மாற்ற மாநாட்டுக்கு கோகோ கோலா நிதியுதவி: வலுக்கும் கண்டனம்

காலநிலை மாற்ற மாநாடு நடத்துவது தொடர்பாக கோககோலா நிறுவனத்துடன் ஐநா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காலநிலை மாற்ற மாநாட்டுக்கு கோகோ கோலா நிதியுதவி: வலுக்கும் கண்டனம்

காலநிலை மாற்ற மாநாடு நடத்துவது தொடர்பாக கோகோகோலா நிறுவனத்துடன் ஐநா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காலநிலை மாற்ற பாதிப்புகள் சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்து வருகின்றன. இதனால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க மாற்று எரிசக்தி மூலங்களுக்கு மாற உலக நாடுகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இவற்றுக்கு மத்தியில் காலநிலை மாற்ற நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக எகிப்து நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை காலநிலை மாற்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்நிலையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கு கோகோகோலா நிறுவனத்துடன் ஐநா ஒப்பந்தம் மேற்கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஓராண்டிற்கு 120 பில்லியன் நெகிழி பாட்டில்களை உற்பத்தி செய்யும் கோககோலா நிறுவனம் உலகின் பிளாஸ்டிக் குப்பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. 

புதைபடிவ எரிபொருள் தொழிற்துறையுடன் பிணைக்கப்பட்ட ஒரு நிறுவனம் உலகின் முக்கியமான காலநிலை மாநாட்டிற்கு நிதியுதவி செய்ய அனுமதிக்கப்படுவது ஆச்சரியமளிக்கிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்மா பிரைஸ்டான்ட் விமர்சனம் தெரிவித்துள்ளார். 

காலநிலை மாற்றத்திற்கு எதிரான மாநாட்டில் கோகோகோலா நிறுவனத்தை அனுமதிப்பது அதன் உண்மையான இலக்கை நோக்கிய பயணத்தையே கேலிக்குள்ளாக்குவதாக உலகம் முழுவதும் விமர்சனம் எழுந்து வருகிறது. 

எனினும் இதுகுறித்து விளக்கமளித்துள்ள கோகோகோலா, கடலில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாகவும், 2030ஆம் ஆண்டிற்குள் தங்களது பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com