பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமெரிக்கா அறிவுரை
அமெரிக்க குடிமக்கள் பாகிஸ்தான் செல்வதற்கு முன் தங்கள் முடிவை பற்றி யோசிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.


அமெரிக்க குடிமக்கள் பாகிஸ்தான் செல்வதற்கு முன் தங்கள் முடிவை பற்றி யோசிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபர் பக்துங்க்வா மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் ஆள்கடத்தல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, வெளிநாட்டுப் பயணிகள் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அரசு தன் நாட்டு குடிமக்களுக்கு ‘பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்க்வா மாகாணங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் அப்பயணம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று அறிவுரை வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...