உடலை வில்லாக வளைக்கும் சிறுமி: கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்

உலகிலேயே மிக அதிக வளைவுத்தன்மை கொண்ட சிறுமி என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
உடலை வில்லாக வளைக்கும் சிறுமி: கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்
உடலை வில்லாக வளைக்கும் சிறுமி: கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்


பிரிட்டனைச் சேர்ந்த 14 வயது சிறுமி லிபர்டி பரோஸ் என்ற ஜிம்னாஸ்டிக் கலைஞர், உடலை வில்லாக வளைத்து, உலகிலேயே மிக அதிக வளைவுத்தன்மை கொண்ட சிறுமி என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

தனது உடலை பின்பக்கமாக வளைத்து, காலுக்குள் தலையை நுழைத்து, நெஞ்சுப் பகுதி தரையில் படுமாறு செய்து அசத்திவிட்டார். அதாவது ஒட்டுமொத்த உடலையும் பின்பக்கமாக வளைத்து உருண்டையாக்கிவிடுகிறார். அது மட்டுமல்ல, வெறும் 30 விநாடிகளில் இதுபோ அவர் மீண்டும் மீண்டும் 11.5 முறை செய்து உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுவிட்டார்.

சின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது குறித்து மிகவும் பெருமையடைகிறேன். இது மிகப்பெரிய சாதனை. என் உடலின் வளையும் தன்மையை நான் உணர்ந்து கொண்டதுதான், நான் நினைத்ததைவிடவும் மிகப்பெரிய இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றுள்ளது. அது எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்றார் லிபர்டி பர்ரோஸ்.

2017ஆம் ஆண்டு சில பாப் நடனக் கலைஞர்களின் நடனங்களை முயற்சித்தபோதுதான், தனது உடலின் வளைவுத்தன்மை குறித்து லிபர்டி உணர்ந்து கொண்டார்.

அது முதல் தொடர்ச்சி பயிற்சி எடுத்து, தற்போது இந்த மிக முக்கியமான இடத்தை அடைந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com