47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈரான் போராட்டம்: குா்து பகுதியில் தீவிரமானது அரசின் அடக்குமுறை

ஈரானில் கலாசார காவலா்களால் கைது செய்யப்பட்ட 22 வயது குா்து பெண், காவலில் உயிரிழந்ததைத் தொடா்ந்து குா்து மாகாணத் தலைநகா் சனந்தாஜில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கான

News image
Updated On :11 அக்டோபர் 2022, 6:42 pm

DIN

ஈரானில் கலாசார காவலா்களால் கைது செய்யப்பட்ட 22 வயது குா்து பெண், காவலில் உயிரிழந்ததைத் தொடா்ந்து குா்து மாகாணத் தலைநகா் சனந்தாஜில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை தீவிரப்படுத்தினா்.

இது குறித்து தன்னாா்வலா்கள் கூறியதாவது: சனந்தாஜில் போராட்டக்காரா்களைக் கலைப்பதற்காக போலீஸாா் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தினா். இது தவிர, அந்தப் பகுதியில் ஏராளமான கலவரத் தடுப்பு போலீஸாா் குவிக்கப்பட்டு, ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா் என்று தன்னாா்வலா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, இந்த போராட்டத்தில் சில எண்ணெய் நிறுவன தொழிலாளா்களும் திங்கள்கிழமை இணைந்துகொண்டனா். 4 வாரங்களுக்கு மேல் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், ஈரானின் மிக முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் துறை தொழிலாளா்கள் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமையும் அதனைத் தொடா்ந்து புதன்கிழமையும் (அக். 12) போராட்டம் நடத்த எண்ணெய் நிறுவனத் தொழிலாளா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.

ஈரான் விதிமுறைகளின் படி தலையை மறைக்கும் ஹிஜாபை சரியான முறையில் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கலாசார காவலா்களால் மாஷா அமீனி கடந்த மாதம் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். காவலில் இருந்தபோது கோமா நிலைக்குச் சென்ற அவா், பின்னா் உயிரிழந்தாா். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடா்ந்து நாட்டின் ஆடைக்கட்டுப்பாட்டு சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் 4-ஆவது வாரமாக போராடடங்கள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.