கனடாவில் கைத்துப்பாக்கிகளின் விற்பனை, கொள்முதலுக்கு தடை விதித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.
கனடாவில் துப்பாக்கி வன்முறையைக் குறைப்பதற்கு அந்த நாட்டு அரசு சமீபத்தில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக கனடாவில் கைத்துப்பாக்கி விற்பனை, கொள்முதல் மற்றும் பரிமாற்றங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.
இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 'கனடா முழுவதும் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருவதால், நம் சமூகத்திலிருந்து இந்த கொடிய ஆயுதங்களை அகற்ற அவசர நடவடிக்கை எடுப்பது எங்கள் கடமை. துப்பாக்கியால் ஏற்படும் வன்முறையை நாட்டில் அனுமதிக்க முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.
கனடா அரசின் இந்த புதிய உத்தரவுப்படி, கனடா மக்கள் அந்த நாட்டிற்குள் இனிமேல் கைத் துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது, மேலும், புதிதாக வாங்கிய கைத்துப்பாக்கிகளை நாட்டுக்குள் கொண்டு வரவோ முடியாது.
கடந்த 40 ஆண்டுகளில் கனடாவில் துப்பாக்கிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சினிமாவிலிருந்து விலகுகிறாரா, த்ரிஷா?

தங்கம் விலை மீண்டும் உயர்வு! எவ்வளவு?
மலையாளக் கரையோரம் யோகிபாபு!

இனிமேலும் குழப்பாம இருங்க ப்ரோ!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

