இனி, நியூ யார்க் பள்ளிகளுக்கும் தீபாவளி விடுமுறை

2023ஆம் ஆண்டு முதல், நியூ யார்க் சிட்டியில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு தீபாவளியன்று விடுமுறை அறிவிக்கப்படும் என மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.
இனி, நியூ யார்க் பள்ளிகளுக்கும் தீபாவளி விடுமுறை


நியூ யார்க்: 2023ஆம் ஆண்டு முதல், நியூ யார்க் சிட்டியில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு தீபாவளியன்று விடுமுறை அறிவிக்கப்படும் என மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.

மேயர் ஆடம்ஸ் மற்றும் நியூ யார்க் பேரவை உறுப்பினர் ஜெனிஃபர் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து, சட்டப்படி தீபாவளியை அங்கீகாரிக்கும் திருத்தத்தை அறிமுகப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய ராஜ்குமார், நியூ யார்க் நகரில் வாழும் 2 லட்சம் இந்து, புத்த, சீக்கிய, ஜைன மத வழிபாட்டாளர்களின் நம்பிக்கையை அங்கீகரிக்கும் வகையில், ஒளியின் பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், நியூ யார்க் சிட்டியில் உள்ள பள்ளிகளில், தீபாவளிக்கு விடுமுறை விட போதிய வழியில்லை என்று மக்கள் கூறியிருந்த நிலையில், எனது புதிய தீர்மானம் மூலம் அந்த வழி ஏற்படுத்தப்படும் என்று பதிலளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com