உகாண்டா பாா்வையற்றோா் பள்ளியில் தீ: 11 சிறுமிகள் பலி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் பாா்வையற்றோா் பள்ளியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 சிறுமிகள் உயிரிழந்தனா்.


கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் பாா்வையற்றோா் பள்ளியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 சிறுமிகள் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தலைநகா் கம்பாலாவுக்கு அருகே, முகோனா பகுதியில் பாா்வையற்றோருக்கான உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.
அந்தப் பள்ளியின் மாணவிகள் தங்கும் பகுதியில் திங்கள்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது. இதில் 7 முதல் 10 வயது வரை கொண்ட 11 சிறுமிகள் உடல் கருகி உயிரிழந்தனா். அவா்களது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளது. மரபணு சோதனையின் மூலம் அவா்கள் அடையாளம் காணப்படுவாா்கள்.
இது தவிர, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் 6 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...