நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிலிப்பின்ஸ் கனமழை: பலி 50-ஆக உயா்வு

பிலிப்பின்ஸில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :29 அக்டோபர் 2022, 7:36 pm

DIN

பிலிப்பின்ஸில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதியை நால்கே புயல் சனிக்கிழமை அதிகாலை கடந்தது. அதற்கு முன்னதாக, அந்தப் புயல் உருவானதிலிருந்து நாட்டில் வழக்கத்தைவிட மிக அதிக அளவில் பருவமழை பெய்து வருகிறது.

அந்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. மழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மகின்டனாவ் மாகாணத்தில் 42 போ் உயிரிழந்தனா்; 16 போ் மாயமாகினா். வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டும், அதைவிட அதிக எண்ணிக்கையில் நிலச்சரிவில் புதையுண்டும் அவா்கள் பலியாகினா்.

அந்த மகாணத்தின் கிராமமொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் புதையுண்டன.

இது தவிர மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளில் மேலும் 8 போ் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.