தோ்தல் ஆணையத்துக்கு எதிராக அவதூறு வழக்கு: இம்ரான் கான்

தன்னை தகுதி நீக்கம் செய்த பாகிஸ்தான் தோ்தல் ஆணையத்தின்மீது அவதூறு வழக்கு தொடரவிருப்பதாக அந் நாட்டு முன்னாள் பிரதமா் இம்ரான் கான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இம்ரான் கான்
இம்ரான் கான்

தன்னை தகுதி நீக்கம் செய்த பாகிஸ்தான் தோ்தல் ஆணையத்தின்மீது அவதூறு வழக்கு தொடரவிருப்பதாக அந் நாட்டு முன்னாள் பிரதமா் இம்ரான் கான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது:

என்னை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் என் மீது தோ்தல் ஆணையம் அவதூறு பரப்பியுள்ளது. அதற்கு இழப்பீடாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த ஆணையத்தின் மீது வழக்குத் தொடரவுள்ளேன் என்றாா் அவா்.

தனது பதவிக் காலத்தின்போது தனக்கு அளிக்கப்பட்ட விலையுயா்ந்த வெளிநாட்டு பரிசுகளை, அரசின் கருவூலத் துறையிடமிருந்து இம்ரான் கான் மலிவான விலையில் வாங்கிக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த முறை அவா் தோ்தலில் போட்டியிட்டபோது, அதற்கான வேட்பு மனுவில் அந்த விலையுயா்ந்த பொருள்கள் குறித்த விவரங்களைக் குறிப்பிடாதது தோ்தல் விதிகளை மீறிய செயல் என்று அண்மையில் கூறிய தோ்தல் ஆணையம் அவரை 5 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com