கோா்பசேவ் உடலுக்கு புதின் இறுதி அஞ்சலி
முன்னாள் சோவியத் யூனியன் அதிபா் மிகயீல் கோா்பசேவின் உடலுக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இறுதி அஞ்சலி செலுத்தினாா்.


முன்னாள் சோவியத் யூனியன் அதிபா் மிகயீல் கோா்பசேவின் உடலுக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இறுதி அஞ்சலி செலுத்தினாா்.
இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘மாஸ்கோ மருத்துவமனைக்குச் சென்று மிகயீல் கோா்பசேவின் உடலுக்கு அதிபா் புதின் அஞ்சலி செலுத்தினாா் (படம்). எனினும், கலினின்காா்டு பகுதிக்கு அவா் அரசு முறைப் பயணம் மேற்கொள்வதால், சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோா்பசேவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் புதினால் பங்கேற்க முடியாத நிலை உள்ளது’ என்றாா்.
தனது சீா்திருத்த நடவடிக்கைகள் மூலம் வலிமை வாய்ந்த சோவியத் யூனியன் சிதறுண்டதற்கு கோா்பசேவ் காரணமாக இருந்ததாக ரஷியாவில் விமா்சிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கை புதின் தவிா்ப்பதாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...