மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

விண்ணில் பாய தயார் நிலையில் நாசாவின் ஆர்டெமிஸ் ராக்கெட்

எரிபொருள் நிரப்பும் பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஆர்டெமிஸ் விண்கலத்தை ஏவுவதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. 

News image
ஆர்டெமிஸ் விண்கலம்
Updated On :3 செப்டம்பர் 2022, 2:29 pm

DIN

எரிபொருள் நிரப்பும் பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஆர்டெமிஸ் விண்கலத்தை ஏவுவதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

நிலவுக்கு மீண்டும் வீரர்களை அனுப்பும் முயற்சியாக ஆர்டெமிஸ் எனப் பெயரிடப்பட்ட திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது.

கடந்த 1969 ஆம் ஆண்டு முதல்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அப்போலோ திட்டத்தின் மூலம் நாசா அனுப்பியது. 2019-ஆம் ஆண்டு அதன் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி 'ஆர்டெமிஸ்' திட்டத்தை தொடங்கியது குறிப்பிட்டத்தக்கது.

இந்த பிரமாண்ட திட்டத்தின்படி ராக்கெட்டை ஆகஸ்ட் 29-ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எரிபொருள் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டதால் கடைசி நேரத்தில் ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறை சீர்செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விண்ணில் ஏவவுள்ளதாக நாசா அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ராக்கெட்டை ஏவுவதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இந்திய நேரப்படி இரவு 11:47 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.