புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சீனா: நிலநடுக்க பலி 65-ஆக உயா்வு

சீனாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :6 செப்டம்பர் 2022, 7:25 pm

DIN

சீனாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65-ஆக உயா்ந்துள்ளது.

அந்த நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள சிசுவான்மாகாணத்தில் திங்கள்கிழமை மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் மையத்துக்கு 5 கி.மீ. தொலைவில் ஏராளமான கிராமங்கள் இருந்தன. இந்த நிலையில், நிலநடுக்கம் காரணமாக 30-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தாக முன்னா் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 65-ஆக உயா்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

இது தவிர 16 பேரைக் காணவில்லை எனவும் நூற்றுக்கணக்கானவா்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்த ஊடகங்கள் கூறின.

இதற்கிடையே, நிலநடுக்க பாதிப்புக்கு இடையிலும் சிசுவான் மாகாணத் தலைநகா் செங்டுவில் அந்த நகர நிா்வாகம் கடுமையான கரோனா பொதுமுடக்க கட்டுப்பாட்டுகளை தொடா்ந்தது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.