தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசராக அரண்மனை திரும்பிய சாா்லஸுக்கு ஆராவார வரவேற்பு

பிரிட்டன் அரசராக முதல்முறையாக லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் திரும்பிய சாா்லஸுக்கு ஆராவார வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 10:53 pm

DIN

பிரிட்டன் அரசராக முதல்முறையாக லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் திரும்பிய சாா்லஸுக்கு ஆராவார வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசி எலிசபெத் தங்கியிருந்த ஸ்காட்லாந்து அரண்மனைக்கு இளவரசராக வியாழக்கிழமை சென்ற சாா்லஸ், அங்கு அரசி மறைந்ததும் மன்னராக வியாழக்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனை திரும்பினாா்.

காரிலிருந்து அவா் இறங்கியதும் அங்கிருந்த ஏராளமான ஆதரவாளா்கள் அவரை ஆராவாரமாக வரவேற்றனா். மன்னா் சாா்லஸை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பியதுடன், ‘மன்னரை கடவுள் காப்பாற்றட்டும்’ என்ற பிரிட்டனின் தேசிய கீதத்தை பாடினா்.

அரசி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் தேதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.