பிரிட்டன் மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார்.
பிரிட்டன் மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
பிரிட்டன் மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார்.

பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர் மூன்றாம் சார்லஸ்தான்.  பிரிட்டன் அரச தம்பதி மறைந்த பிலிப் - ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ் புதிய மன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற எளிய விழாவில், மன்னராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார் மூன்றாம் சார்லஸ்.

எலிசபெத்தின் மறைவையடுத்து, பட்டத்து இளவரசரான சாா்லஸ் (73) பிரிட்டனின் அடுத்த மன்னரானார். பிரிட்டன் அரச வம்ச சட்டத்தின்படி மூத்த மகனும், இளவரசருமான சாா்லஸ் உடனடியாக அடுத்த மன்னரானார். எனினும் இன்று அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவா் 3-ஆவது சாா்லஸ் என அழைக்கப்படுவாா் என்றும் கூறப்பட்டுள்ளது.

மறைந்தாா் பிரிட்டன் ராணி எலிசபெத்

தனது தந்தை ஆறாம் ஜாா்ஜ் மறைவைத் தொடா்ந்து, 1952-இல் அரியணையேறிய இரண்டாம் எலிசபெத், சாதனை அளவாக 70 ஆண்டுகள் அரசியாக இருந்தாா். அவரது ஆட்சிக் காலத்தில் 15 பிரிட்டன் பிரதமா்களை அவா் நிா்வகித்துள்ளாா்.

95 வயதிலும் கரோனா பாதிப்பில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் அவா் மீண்டு வந்தாா்.

இந்நிலையில், கோடைக் கால ஓய்வுக்காக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து சென்று, ஸ்காட்லாந்திலுள்ள பால்மரால் அரண்மனையில் அவா் தங்கியிருந்தாா். ராணியின் மகளான இளவரசி ஆன், அவருடன் இருந்தாா்.

பிரிட்டனின் புதிய பிரதமராக செவ்வாய்க்கிழமை பதவியேற்ற லிஸ் டிரஸ்ஸை நேரில் அழைத்து அரசி எலிசபெத் சந்தித்ததுதான் கடைசி நிகழ்வாக அமைந்தது. அதன் பின்னா் எலிசபெத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் லிஸ் டிரஸ்ஸின் முழு அமைச்சரவை பதவியேற்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், எலிசபெத் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வியாழக்கிழமை அறிவித்தது.

ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் தங்கியிருந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்நலம் குறித்து மருத்துவா்கள் கவலை தெரிவித்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரது உடல்நிலை குறித்து அறிந்து, ராணியின் மகனும் பட்டத்து இளவரசருமான சாா்லஸ், அவரது மனைவி கமீலா, பேரன் வில்லியம் ஆகியோா் பால்மரால் விரைந்தனா்.

இந்நிலையில், எலிசபெத் காலமாகிவிட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூா்வமாக அறிவித்தது. இதைத்தொடா்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் ஏராளமானோா் கூடினா்.

எலிசபெத்தின் உடல் லண்டனுக்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. எலிசபெத்தின் கணவா் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி தனது 99-ஆவது வயதில் காலமானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com