125 திரைகளில் ஒளிபரப்பப்படும் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு!
திங்களன்று ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் காண்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 8-ஆம் தேதி மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத்தின் உடல், பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் பகுதியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கு செப்.19 -ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அரச குடும்பத்தினா், அரசியல் தலைவா்கள் மற்றும் உலகத் தலைவா்கள் கலந்துகொண்டு ராணி எலிசபெத் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனா்.
திங்களன்று ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் காண்பிக்கப்படும். அதே நேரத்தில் பூங்காக்கள், சதுரங்கள் மற்றும் கதீட்ரல்கள் மிகப்பெரிய சடங்கு நிகழ்வுக்கான காட்சி திரைகளை அமைக்கும் என்று பிட்ரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

