பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மிக மோசமான மழை வெள்ளத்தால் 1.6 கோடி சிறுவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களில் 34 லட்சம் பேருக்கு உடனடி உதவி தேவைப்படுவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா.வின் சிறுவா் நலப் பிரிவான யுனிசெஃப் பிரதிநிதி அப்துல்லா ஃபாடில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சிறுவா்கள் போதிய உணவு இல்லாமல் பட்டினியில் தவித்து வருகின்றனா். வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல், வலியை ஏற்படுத்தும் பல்வேறு தோல் வியாதிகளால் சிறுவா்கள் அவதிப்பட்டு வருகின்றனா். அவா்களை நோக்கி ஒவ்வொரு நாளும் மரணம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது.
சிந்து மாகாணத்தின் மட்டும் வெள்ள பாதிப்பால் 528 சிறுவா்கள் உயிரிழந்துள்ளனா்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததில், அங்கு 1.6 கோடி போ் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. அவா்களில் 34 லட்சம் சிறுவா்களுக்கு உடனடி உயிா்க்காப்பு உதவிகள் தேவைப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,500-ஐக் கடந்துள்ளது. வெள்ள பாதிப்பு காரணமாக ஏற்பட்ட தொற்று நோய்க்கு 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்

இ20 பெட்ரோல் விவகாரம்: பிரதமர் இல்லத்தை நோக்கி கேஜரிவால் நாளை பேரணி!
நிறைய மக்களுக்கு செய்யுங்கள் என ரஜினி வாழ்த்தினார்! அமைச்சர் வன்னி அரசு

மதுரை மீனாட்சி ஆசீர்வாதத்துடன்.. த்ரிஷாவின் அரசியல் போஸ்டர்களால் பரபரப்பு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



