
வாஷிங்டன்: இதுவரை வைரஸ் தாக்குதலிலிருந்து மனிதர்களைக் காத்து வந்த முகக்கவசம், இனி வைரஸ் காற்றில் கலந்திருந்தால் அதை மெசேஜ் மூலம் அணிந்திருப்பவருக்குக் காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முகக்கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நவீன முகக்கவசத்தை ஒருவர் அணிந்து கொண்டு வெளியில் செல்லும் போது, அவரைச் சுற்றிலும் இருக்கும் காற்றில் சாதாரண வைரஸ் முதல் கரோனா வைரஸ் வரை எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் செல்லிடப்பேசிக்கு செய்தியாக அனுப்பி, முகக்கவசம் அணிந்திருப்பவரை எச்சரிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கபடி வீரர்களுக்கு கழிப்பறையில் பரிமாறப்பட்ட உணவு: விடியோ வைரல்
ஷாங்காய் டோங்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய முகக்கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரோனா மற்றும் எச்ஒன்என்ஒன் போன்ற வைரஸ்களால் பாதிக்கப்பட்டவர்கள் பேசும்போது, இரும்பும்போது, தும்பும் போது அவர்களது மூச்சுக்காற்றிலிருக்கும் சிறு நீர்க்குமிழ்கள் வழியாக வெளியே காற்றில் கலந்து, மற்றவர்களுக்குப் பரவி விடுகறிது. இதனைத் தடுக்க முகக்கவசம் அணிந்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
ஆன்டிபாடிகள் போன்ற நோய்க்கிருமிகளின் தனித்துவமான புரதங்களை அடையாள காணக்கூடிய ஒரு வகை செயற்கை மூலக்கூறான அப்டேமர்களைக் கொண்ட சிறிய சென்சார் பொருத்தப்பட்ட முகக்கவசங்களை இந்தக் குழு வடிவமைத்துள்ளது.
இந்த சென்சார் மூலம், ஒரே நேரத்தில் காற்றில் கலந்திருக்கும் சார்ஸ்-கோவிட், எச்ஒன்என்ஒன் உள்ளிட்ட வைரஸ்களை ஒரே நேரத்தில் கூட அடையாளம் கண்டு, பயன்படுத்துபவரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.