ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையோரம் 230க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் தீவில் கடந்த திங்கள்கிழமை 14 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருந்தன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக புதன்கிழமை மேற்கு கடற்கரைப் பகுதியில் 230க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இருப்பது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிருடன் இருப்பதால் அவற்றை பத்திரமாக கடலில் விட இயற்கைவளம் மற்றும் சுற்றுச்சுழல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க | வரதட்சணை, ஆடம்பர திருமணத்துக்குத் தடா: ஜம்மு-காஷ்மீரில் ஒரு கிராமம்
உணவு தேடி புதிய இடத்திற்கு வந்த திமிங்கலங்களின் உடல்நிலை பாதிப்பால் கரை ஒதுங்கியிருக்கலாம் எனவும் எனினும் இதுவரை உறுதியான காரணங்கள் கண்டறியப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக 470 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ஜூலை 30 செய்திகள் - நேரலை!

கோமியம் நிபுணர்! ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் குறித்த பிரியங்கா காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு!

அரசு நடந்துகொள்வது சரியல்ல! - தி.க. பிரசார அனுமதி மறுப்புக்கு சிபிஎம் கண்டனம்!

பாஜகவில் இணையுமாறு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனை
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



