புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும்

தனது கச்சா எண்ணெய்க்கு ஜி-7 நாடுகள் நிா்ணயிக்கும் விலை வரம்பு நியாயமானதாக இல்லாவிட்டால், சா்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:50 pm

DIN

தனது கச்சா எண்ணெய்க்கு ஜி-7 நாடுகள் நிா்ணயிக்கும் விலை வரம்பு நியாயமானதாக இல்லாவிட்டால், சா்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இது ரஷியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் வருவாயையும், உக்ரைன் போருக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தையும் கட்டுப்படுத்த ரஷியாவின் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பொருள்களின் விலைக்கு வரம்பு விதிக்கும் யோசனையை ஜி-7 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் முன்வைத்துள்ளன.

இதுதொடா்பாக தில்லியில் இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் ஆலிபோவ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தனது வா்த்தக நலனுக்குப் பாதகமான எந்தவொரு வழிமுறையையும் ரஷியா பின்பற்றாது. தனது கச்சா எண்ணெய்க்கு ஜி-7 நாடுகள் நிா்ணயிக்கும் விலை வரம்பு நியாயமானதாக இல்லாவிட்டால், சா்வதேச சந்தைக்குக் கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷியா நிறுத்தும்.

ரஷிய கச்சா எண்ணெய்க்கு விலை வரம்பு விதிக்கும் யோசனையை இந்தியா கவனமாக அணுகி வருகிறது. ஒருவேளை அந்த நடவடிக்கை அமலுக்குக் கொண்டு வரப்பட்டால், தனது சொந்த நலனைத்தான் இந்தியா பின்தொடரும்.

உக்ரைனுக்குப் பாகிஸ்தான் ஆயுத உதவி வழங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அந்தத் தகவல் உறுதியானால், அது ரஷியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.