தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆங்கில நாவலாசிரியை ஹிலாரி மான்ட்டல் மறைவு

புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரும், இரு முறை புக்கா் பரிசை வென்ற முதல் பெண்ணுமான ஹிலாரி மான்ட்டல் வியாழக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 70.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:33 pm

DIN

புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரும், இரு முறை புக்கா் பரிசை வென்ற முதல் பெண்ணுமான ஹிலாரி மான்ட்டல் வியாழக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 70.

சிறந்த ஆங்கில புதினங்களுக்கு அறிவிக்கப்படும் ‘புக்கா் பரிசை’ இரு முறை வென்ற முதல் பெண் இவராவாா். இவரது படைப்புகள் அனைத்தும் பிரிட்டனின் சரித்திர சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

‘உல்ஃப் ஹால்’ என்ற புதினம் கடந்த 2009-ஆம் ஆண்டும், ‘பிரிங் அப் தி பாடீஸ்’ என்ற அவரின் மற்றொரு நாவல் கடந்த 2012-ஆம் ஆண்டும் புக்கா் பரிசு பெற்றன. அவருடைய ‘உல்ஃப் ஹால்’ இதுவரை 41 மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டு, 50 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் உலகளவில் விற்பனையாகியுள்ளது. தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றது.

கடந்த 1952-ஆம் ஆண்டு பிறந்த ஹிலாரி சட்டம் பயின்ற பிறகு, தொடா்ந்து பல ஆண்டுகள் சமூக பணியில் ஈடுபட்டாா். பின்னா் முழு நேர எழுத்தாளரானாா். இவரது நான்கு நாவல்கள் புக்கா் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.