இலங்கையில் கருவூலத் துறைச் செயலரும் ராஜிநாமா

இலங்கைக் கருவூலத் துறைச் செயலராக இருந்த எஸ்.ஆர். அட்டிகல ராஜிநாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு அனுப்பியுள்ளார்.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் அதிபர் கோத்தபய ராஜபட்சவின் பதவி விலகலை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் இறங்கிய சிங்களர்கள்
இலங்கைத் தலைநகர் கொழும்பில் அதிபர் கோத்தபய ராஜபட்சவின் பதவி விலகலை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் இறங்கிய சிங்களர்கள்

இலங்கைப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கத் தற்போது அரசியல் குழப்பமும் மேலோங்கத் தொடங்கியுள்ளது.

தலைநகரில் அடுத்தடுத்த ராஜிநாமாக்களுடன் தற்போது கருவூலத் துறைச் செயலரின் விலகலும் இணைந்துள்ளது. 

தன்னுடைய சகோதரர் பசில் ராஜபட்சவிடமிருந்து நிதித் துறை அமைச்சர் பதவியைப் பறித்த அதிபர் கோத்தபய ராஜபட்ச, நிதித்துறை அமைச்சராக நீதித் துறையைக் கவனித்துவந்த அலி சாப்ரியை நியமித்தார்.

ஆனால், 24 மணி நேரத்துக்குள் அலி சாப்ரியும் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துவிட்டார்.

இதனிடையே, கருவூலத் துறைச் செயலராக இருந்த எஸ்.ஆர். அட்டிகலவும் தன்னுடைய ராஜிநாமாக் கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு அனுப்பியுள்ளார்.

நிதித் துறை அமைச்சர் பதவியும் காலியாக இருக்கும் நிலையில் அட்டிகலவும் ராஜிநாமா செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com