இலங்கை: போராட்ட பகுதியிலிருந்து வெளியேற மக்கள் முடிவு

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மக்கள் காலி முகத்திடலிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.
இலங்கை: போராட்ட பகுதியிலிருந்து வெளியேற மக்கள் முடிவு

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மக்கள் காலி முகத்திடலிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்றாா். பின்னா், அங்கிருந்து சிங்கப்பூா் சென்ற அவா் தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, கடந்த ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தோ்வு செய்யப்பட்டாா்.

மேலும், நாடாளுமன்றத்தில்  அதிபராக முதல்முறை உரையாற்றிய ரணில், இக்கட்டான சூழலில் மருந்துகளை வழங்கிய இந்தியாவிற்கு நன்றி தெரிவித்ததுடன் எதிர்கால திட்டம் குறித்தும் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் உள்ள அனைத்து சட்டவிரோத கூடாரங்களையும் முகாம்களையும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அகற்றி அப்பகுதியை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் கலைந்து செல்லாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று போராட்டக்காரர்கள் காலி முகத்திடலை விட்டு வெளியேறுவதாகவும் போராட்டம் புதிய வடிவில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள கூடாரங்கள் மற்றும் முகாம்கள் விரைவில் அகற்றப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com