ரஷிய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஆலோசனை

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷிய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆலோசனை நடத்தி உள்ளார்.
ரஷிய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஆலோசனை

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷிய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆலோசனை நடத்தி உள்ளார்.

ஐரோப்பிய நாடான உக்ரைன்-ரஷியா இடையே கடந்த பல நாள்களாகவே போா்ப் பதற்றம் நிலவி வந்தது. நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது நேற்று திடீரென பலமுனைத் தாக்குதல்களை தொடங்கியது. ரஷியா தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இருப்பினும் உக்ரைன் தலைநகர் கிவ்வை நோக்கி ரஷியா ராணுவம் தொடர்ந்து 2-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் பாதுகாப்புப் படையும் பதிலடி கொடுத்து வருகிறது.

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷிய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண ரஷிய அதிபரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு சீனா ஆதரவு அளித்துள்ள நிலையில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com