germany081343
germany081343

ஜொ்மனியில் கரோனா புதிய உச்சம்

ஜொ்மனியில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதன்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டின் ராபா்ட் காச் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
Published on


பொ்லின்: ஜொ்மனியில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதன்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டின் ராபா்ட் காச் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,12,323 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 239 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜொ்மனியில் இதுவரை 81,40,446 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவா்களில் 1,16,610 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com