அரிதான புற்றுநோய் பாதித்த பெண்ணின் நாக்கில் வளரும் முடி

அரிதினும் அரிதான புற்றுநோய் பாதித்த பெண்ணின் நாக்கில் முடி வளர்வது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரிதான புற்றுநோய் பாதித்த பெண்ணின் நாக்கில் வளரும் முடி
அரிதான புற்றுநோய் பாதித்த பெண்ணின் நாக்கில் வளரும் முடி

அரிதினும் அரிதான புற்றுநோய் பாதித்த பெண்ணின் நாக்கில் முடி வளர்வது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் கேமரூன் நியூஸோம். ஒரு குழந்தைக்க தாயான இவருக்கு ஏற்பட்ட அரிதான புற்றுநோயை கண்டுபிடிக்கவே மருத்துவர்களுக்கு பல காலம் ஆனது.

நாக்கில் உருவான ஒரு வெள்ளைப் புள்ளி என்ன என்று கண்டுபிடிப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்குள் அவரது நாக்கில் உருவான புற்றுநோய் நான்காவது கட்டத்தை எட்டிவிட்டிருந்தது. இந்த அரிதான புற்றுநோயால் சாப்பிடவோ பேசவோ இயலாமல் அவர் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோய் என்று கண்டறிவதற்கு முன்பு, அவருக்கு சாதாரண ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தன. எனினும் அவை பலனளிக்கவில்லை.

பிறகுதான், 2013ஆம் ஆண்டில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஒருவர், நியூசோனாவுக்கு ஏற்பட்டிருப்பது அரிதான தோல் புற்றுநோய் என்பதை.

ஆரம்பத்தில் புற்றுநோய் குறித்து அறிந்து அவரும் அவரது குடும்பமும் கலங்கித்தான் போயினர். பிறகு அதற்கெதிரான தனது போராட்டத்தை உத்வேகத்துடன் தொடங்கினார் நியூஸோனா.

அவருக்கு முதலில் கீமோதெரபி அளிக்கப்பட்டு, பிறகு, நாக்கிலிருந்து புற்றுநோய் பாதித்த பகுதி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதற்கு  மாற்றாக, அவரது தொடைப் பகுதியின் தோல் நாக்கில் வைத்து தைக்கப்பட்டது.

அதன்பிறகும் ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபிகள் கொடுக்கப்பட்டது. அவருக்கு பேசவும், சாப்பிடவும் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன.

இது குறித்துஅவர் கூறுகையில், எனது நாக்கின் ஒரு பகுதி எந்த உணர்வுமில்லாமல் ஒரு தோல் பகுதியைக் கொண்டிருப்பதாக உணர்வேன். ஒரு நாள் நான் கண்ணாடி முன் நின்று கொண்டு எனது நாக்கை உற்றுப் பார்த்த போது, தொடையிலிருந்து வைத்த தோல் பகுதியில் சிறு முடிகள் வளர்ந்திருப்பதைக் கவனித்தேன் என்கிறார்.

அவர் புற்றுநோயிலிருந்து பூரணமாகக் குணமடைந்து விட்டதாகவும், புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருப்பதாகவும் கூறுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com