இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, மாளிகையை விட்டு தப்பியோடியதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபட்ச விலகியதை அடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக்கோரி கடந்த சில மாதங்களாகவே எதிர்க்கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக இன்று மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபட்ச மாளிகையை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் மற்றும் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பொதுமக்களில் சிலர் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து போராட்டக்காரர்களின் முற்றுகை காரணமாக அதிபர் கோத்தப ராஜபட்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடியதாக பாதுகாப்புத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் மாளிகையை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

காற்றாலை மின் திட்டத்தில் ரூ. 1,736 கோடி முதலீடு செய்யும் கெயில்!
அன்பே டயானா டீசர்!

மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நுழைவாயிலில் சர்ச்சையை ஏற்படுத்திய படம்!
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

