நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இலங்கை பிரதமர் ரணில் வீட்டுக்கு தீவைப்பு

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :9 ஜூலை 2022, 9:58 pm IST

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இலங்கையில் நிலவி வந்த கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தொடரும் பொருளாதார சிக்கல் காரணமாக கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் மக்கள் தங்களது அத்தியாவசிய சேவையை பெறுவதற்கு கூட மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் அதிபர் மாளிகையை மக்கள் இன்று முற்றுகையிட்டதால் அதிபர் கோத்தபய ராஜபட்ச அங்கிருந்து தப்பியோடினார். இதனிடையே அசாதாரண சூழலின் மத்தியில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படிக்க- அணி மாறினார் சஹா

இத்தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் கொழும்புவில் உள்ள இலங்கை பிரதமர் ரணில் வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தினர். தொடர்ந்து அவரது வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

இதனால் இலங்கையில் பதற்றம் நிலவுகிறது. பதவி விலகப்போவதாக ரணில் ஏற்கெனவே அறிவித்த நிலையில், அவரது வீட்டிற்கு தற்போது போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.