வன உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்

காலநிலை மாற்ற தாக்கத்தினால் சுற்றுப்புறச் சூழல் நாளுக்குநாள் மோசமான பாதிப்புகளை சந்தித்துவருவதாக ஆஸ்திரேலிய அரசின் சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. 
வன உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்
வன உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்

காலநிலை மாற்ற தாக்கத்தினால் சுற்றுப்புறச் சூழல் நாளுக்குநாள் மோசமான பாதிப்புகளை சந்தித்துவருவதாக ஆஸ்திரேலிய அரசின் சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. 

ஆஸ்திரேலிய நாடானது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறியப்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு அரிய வகை விலங்கினங்களும், ஆஸ்திரேலிய நிலப்பரப்புக்கேற்ற தன்மையுடன் கூடிய சிறப்புவாய்ந்த உயிர்வாழ்விகளும் வசித்து வருகின்றன. சமீபத்திய காலத்தில் அதிகரித்துவரும் காலநிலை மாறுபாடு சிக்கல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அந்நாடு பாதிப்புகளை எதிர்கொண்டு வருவது அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் அறிக்கையில் காலநிலை மாற்றத்தால் விலங்கினங்கள் அழிந்துவருவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  காலநிலை மாற்றத்தால் அழியும் தருவாயில் உள்ள வன உயிர்களின் எண்ணிக்கை கடந்த 2016ஆம் ஆண்டின் அறிக்கையிலிருந்து 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. 

அந்த நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் லிபரல் கூட்டணியைத் தோற்கடித்து லேபா் கட்சி வெற்றி பெற்ற நிலையில் காலநிலை மாற்ற சிக்கலுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆளும் தொழிலாளர் கட்சி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2005ஆம் ஆண்டுக்கு முன் இருந்த கார்பன் அளவில் 43 சதவிகிதத்தை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. 

அதன்படி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீ வன உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com