அமெரிக்கா: முதல் குரங்கு அம்மை நோய் பாதிப்பு

முதல் குரங்கு அம்மை நோய் பாதிப்பினை இரு குழந்தைகளிடம் கண்டறிந்ததாக அமெரிக்காவின் தேசிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 
அமெரிக்கா: முதல் குரங்கு அம்மை நோய் பாதிப்பு

முதல் குரங்கு அம்மை நோய் பாதிப்பினை இரு குழந்தைகளிடம் கண்டறிந்ததாக அமெரிக்காவின் தேசிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வரும் நிலையில் அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தகவலின் படி கலிஃபோர்னியாவில் வசிக்கும் ஒரு கைக்குழந்தை. இன்னொருவர் அமெரிக்காவை நாட்டைச் சேராத குழந்தை எனவும் தெரிய வருகிறது. 

நோய் பாதிப்பினை கண்டறிந்த பின்பு அது எவ்வாறு பரவியிருக்கும் என்பதனை விசாரித்து வருவதாக தகவல் தெரிகிறது. குழந்தைகளுக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு அதிகமான பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் துணை இயக்குநர் ஜெனிஃபர் மெக்குயிஷ்டின் கூறியதாவது: 

ஐரோப்பாவிலும் மற்ற பகுதியிலும் நோய் பாதிப்பு அதிகமாக பரவி வரும் நிலையில் பெண்களும் குழந்தைகளும் பாதிப்படைவதை பார்த்தோம். அதனால் குழந்தை பாதிப்படைந்தது எங்களுக்கு ஆச்சரியமாக இல்லை. எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறோம். 3 இலட்சம் குரங்கம்மை தடுப்பூசிகளை வாங்கியிள்ளோம். இன்னும் சில நாட்களில் 1 இலட்சம் மக்களுக்காவது தடுப்பூசி செலுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com