ஆஸ்திரேலியா: உச்சத்தை தொடும் கரோனா பாதிப்புகள்

ஆஸ்திரேலிய நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா தொற்று பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆஸ்திரேலிய நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா தொற்று பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்த தகவலின்படி கரோனா பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை திங்கள் கிழமை 5433 ஆக உயர்ந்துள்ளது. ஜனவரியில் 5390 ஆக இருந்த்தது. 

குளிர் காலம் தொடங்க இருப்பதால் அடுத்த வாரங்களில் இன்னும் பாதிப்புகள் அதிகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மருத்துவமனைகளின் மீது பெரிய அழுத்ததை ஏற்படுத்துமென தகவல் சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் மருத்துவக்குழுவின் துணைத்தலைவர் கிரிஸ் மோய்,  “கரோனா பாதிப்புகள் புதிய  உச்சத்தை தொடும்” எனக் கூறியுள்ளார். 
 
இறுதியாக வந்த தகவலின்படி திங்கள் கிழமை மதியம் மொத்த கரோனா பாதிப்புகள் 9,139,047. இதில் 11,200 மரணங்களும் அடங்கும். செவ்வாய்கிழமை புதியதாக 40,000 கரோனா பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 90க்கு மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்கை எண்ணிக்கைகள் இல்லை எனவும் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com