'ரஷியத் தாக்குதலுக்கு நேட்டோ பச்சைக்கொடி காட்டுகிறது' - உக்ரைன் அதிபர் கண்டனம்

உக்ரைன் நாட்டில் விமானங்கள் பறக்க நேட்டோ தடை விதிக்க மறுத்தது கண்டிக்கத்தக்கது என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 
உக்ரைன் அதிபர்
உக்ரைன் அதிபர்

உக்ரைன் நாட்டில் விமானங்கள் பறக்க நேட்டோ தடை விதிக்க மறுத்தது கண்டிக்கத்தக்கது என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பிற நாடுகளின் ராணுவ தளவாடங்கள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. 

உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அவ்வப்போது நாட்டின் நிலைமை குறித்து விடியோ பதிவிட்டு வருகிறார். 

உக்ரைன் நாட்டில் வானில் விமானங்கள் பறக்க நேட்டோ தடை விதிக்க வேண்டும் என்ற உக்ரைனின் அதிபரின் கோரிக்கையை நேட்டோ நிராகரித்துள்ளது. இதற்கு உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ரஷியப் படையின் தாக்குதல் தீவிரம் அதிகரிக்கும் என்றும் தெரிந்தும் புதிய தாக்குதல்களும் இழப்புகளும் தவிர்க்க முடியாதவை என்று அறிந்தும் உக்ரைன் வானில் விமானங்கள் பறக்க நேட்டோ படைகள் மறுப்பது, ரஷியப் படையின் தாக்குதலுக்கு ஆதரவளிப்பதாகவே உள்ளது. 

உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது ரஷியா மேலும் தாக்குதல் நடத்த நேட்டோ பச்சைக்கொடி காட்டியுள்ளது' என்று விமரிசித்துள்ளார். 

இதையடுத்து நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், உக்ரைன் அதிபரின் கோரிக்கையை ஏற்றால் ஐரோப்பா கண்டம் முழுவதுமே போர்ச்சூழல் உருவாகும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com