

உக்ரைனில் போர் நடந்து வரும் அந்நாட்டின் ராணுவ வீரரும் வீராங்கனையும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர் தாக்குதலில் சில முக்கிய நகரங்களை ரஷியப் படைகள் கைப்பற்றியுள்ளனர்.
இருப்பினும், தலைநகர் கீவ்வில் ரஷியப் படைகளுக்கும் உக்ரைன் படைகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நிலவி வருகின்றது.
இதையும் படிக்க | ரஷிய அதிபருடன் 50 நிமிடங்கள் பேசிய மோடி
இந்நிலையில், கீவ் நகர எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் வீரலெசியா இவாஷ்செங்கோ மற்றும் வீராங்கனை வலேரி ஃபைலிமோனோவ் ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் பங்கேற்ற மேயர் விட்டலி கிளிட்ச்கோ உள்ளிட்ட சக ராணுவ வீரர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
போர் களத்தில் நடந்த திருமண விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதுடன் பல்வேறு தரப்பினர் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.