மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உக்ரைனைவிட்டு வெளியேறும் பொதுமக்கள் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்: 7 பேர் பலி

உக்ரைனிலிருந்து வெளியேறும் பொதுமக்கள் வாகனத்தின் மீது ரஷியா வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 மார்ச் 2022, 5:09 am


உக்ரைனிலிருந்து வெளியேறும் பொதுமக்கள் வாகனத்தின் மீது ரஷியா வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 18-வது நாளாக ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அந்த நாட்டைவிட்டு ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர். கீவ் நகரிலிருந்து வடகிழக்கில் 20 கி.மீ. தொலைவிலுள்ள பெரேமோஹா கிராமத்திலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். அப்போது ரஷியா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நிறைய பேர் காயமடைந்துள்ளனர்.

போர்ப் பகுதிகளில் வெளியேறுவதற்கு பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கப்படும் என ரஷியா தெரிவித்த நிலையில், அந்தப் பாதைகளை மறித்து அப்பாவி மக்கள் மீது ரஷியா துப்பாக்கிச் சூடு நடத்துவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் அகதிகள் ஏஜென்ஸி தரவுகளின்படி ரஷியா போர் தொடுக்கத் தொடங்கியதிலிருந்து கடந்த 17 நாள்களில் 25 லட்சம் பேர் உக்ரைனைவிட்டு வெளியேறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.