
உக்ரைன் மீதான போரை நிறுத்த மாட்டோம் என ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபரின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 23 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை நிறுத்த உத்தரவிட்ட சர்வதேச நீதிமன்ற ஆணையை ரஷியா நிராகரித்துள்ளது.
பன்னாட்டு ஒப்பந்தங்களின் படி, சர்வதேச நீதிமன்றத்தின் ஆணைக்கு ரஷியா கட்டுப்படும் என உக்ரைன் கூறியிருந்த நிலையில் ரஷியா உக்ரைன் மீதான தாக்குதலை கைவிட மாட்டோம் என தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | போரில் 14,000 ரஷிய வீரர்கள் பலி: உக்ரைன் பாதுகாப்புத் துறை