வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

போரில் 14,000 ரஷிய வீரர்கள் பலி: உக்ரைன் பாதுகாப்புத் துறை

உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் போரில்  ரஷிய படையினர் 14,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2022, 10:21 am

உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் போரில்  ரஷிய படையினர் 14,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

ரஷிய அதிபரின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 23 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம்  14,000 ராணுவ வீரர்கள், 82 விமானங்கள், 95 ஹெலிகாப்டர்கள், 404 பீரங்கிகள், 1,283 ஆயுதம் ஏந்திய வாகனங்கள், 640 வாகனங்கள், 3 போர்க் கப்பல்கள் உள்ளிட்டவை ரஷிய படை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.