
கீவ் நகரில் தாக்குதலுக்குள்ளான குடியிருப்பில் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மேயர் விட்டலி கிளிட்ச்கோ செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
ரஷிய அதிபரின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 20 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிக்க | உக்ரைனிலிருந்து 22,500 இந்தியர்கள் மீட்பு: மாநிலங்களவையில் ஜெய்சங்கர் தகவல்
இதற்கிடையே இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வின் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று இரவு 8 மணிமுதல் மார்ச் 17 காலை 7 மணிவரை ஊரடங்கு அமல்படுத்துவதாகவும், குண்டுவீச்சில் இருந்து பாதுகாத்து கொள்ளும் இடங்களுக்கு மட்டுமே செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கீவ் மேயர் உத்தரவிட்டுள்ளார்.