ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும், பெண்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின்னர் அங்கு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
கரோனா காரணமாகவும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர்- நவம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் 7 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை பள்ளி செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அன்றைய தினமே மீண்டும் பெண்கள் கல்வி பயில தலிபான்கள் தடை விதித்தனர்.
ஆப்கானிஸ்தானில் 6-ஆம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி பயில அனுமதி கிடையாது என தலிபான்கள் அறிவித்துள்ளனா்.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராகப் போரிட்டபோது பெண்கள் உயா்கல்வி கற்க அனுமதிக்கப்படும் என தலிபான்கள் வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து கனடா, பிரான்ஸ், இத்தாலி, நார்வே, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதில், பெண் கல்வியை மறுக்கும் தலிபான் அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் தலிபான்கள் தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற பெண் குழந்தைகள் கல்விக்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் குழு தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசு

வத்திராயிருப்பு அருகே ரூ.92 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

