தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

போலந்து மீது விழுந்தது ரஷிய ஏவுகணை அல்ல! சிக்கலில் உக்ரைன்

போலந்து மீது விழுந்த ஏவுகணை ரஷியப் படையினர் வீசப்பட்டது இல்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :16 நவம்பர் 2022, 6:33 am

DIN

போலந்து மீது விழுந்த ஏவுகணை ரஷியப் படையினர் வீசப்பட்டது இல்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வருகின்றது. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் உறுப்பினராக இணையவில்லை என்றாலும் நேட்டோவால் உதவிகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், உக்ரைன் மீது நேற்று இரவு நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ரஷியப் படையினர் தீவிர தாக்குதலை மேற்கொண்டனர். இதில், உக்ரைன் - போலந்து எல்லையில் போலந்து நாட்டின் பகுதியில் இரண்டு ரஷிய ஏவுகணைகள் விழுந்ததாகவும், இதில் இரண்டு போலந்து மக்கள் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போலந்து மீது விழுந்த ஏவுகணைகள் ரஷியாவை சேர்ந்தது என்று அந்நாடு குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில் ரஷியா மறுத்தது.

நேட்டோ கூட்டமைப்பின் கீழ் இருக்கும் ஒரு நாட்டின் மீது பிற நாடுகள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் ‘நேட்டோ சட்டப் பிரிவு 5-ஐ’ பயன்படுத்தி தாக்குதல் நடத்திய நாட்டின் மீது நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் தாக்குதல் நடத்தலாம் என்ற விதிமுறை உள்ளது.

இதற்கிடையே, போலந்து அதிபருடன் தொடர்பு கொண்டு பேசிய ஜோ பைடன், அனைத்து உதவிகளும் நேட்டோ தரப்பில் வழங்கப்படும் எனக் கூறியதுடன், நேட்டோ கூட்டத்திலும் ஆலோசித்தார்.

இந்நிலையில், முதல்கட்ட விசாரணை மேற்கொண்டதில் போலந்தில் விழுந்த ஏவுகணைகள், ரஷிய - போலந்து பாதையில் ஏவப்பட்டதற்கான வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷியத் தாக்குதலை தடுக்க உக்ரைன் படையினர் பயன்படுத்தியதாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, முழு விசாரணை முடிவடைந்த பிறகே அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து நேட்டோ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.