தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

சீனத்தில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியது கூகுள்

சீனத்தில் பல்வேறு சேவைகளை கூகுள் நிறுத்திவந்த நிலையில், தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

சீனத்தில் மொழிபெயர்ப்பு சேவையை முற்றிலும் நிறுத்தியது கூகுள்

Published On :

பெய்ஜிங்: சீனத்தில் பல்வேறு சேவைகளை கூகுள் நிறுத்திவந்த நிலையில், தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தொடர்ந்து பல சேவைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் கூகுள், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் மொழிபெயர்ப்பு சேவையையே நிறுத்திவிட்டது என்றால் அது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம்.

கூகுளுக்கு ஏற்படும் சறுக்கல்கள் வழக்கமானதுதான். ஆனால் சீனத்தில் தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியிருப்பது பெரிய பின்னடைவாகப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஒருபக்கம் கூகுள் சேவைகளை ஹேக் செய்வது, சீனத்தில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூகுள் அளிக்கும் சேவைகளை விட மிகச் சிறப்பான சேவையை வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் சீனத்தில் கூகுள் சிறப்பான இயக்கத்தை வெளிப்படுத்த முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், 2017ஆம் ஆண்டு சீனத்தில் தொடங்கப்பட்ட கூகுள் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. குறைவான பயன்பாட்டினால் கூகுள் தனது சேவையை நிறுத்திக் கொண்டுள்ளது. சீன மொழியை மொழிபெயர்ப்பதில் கூகுளை விடவும் உள்நாட்டு செயலிகள் சக்கைப்போடு போடுவதே இதற்குக் காரணமாக அமையலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.