சார்ஜர் இல்லாமல் ஐஃபோனை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.165 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் தனக்கென தனி முத்திரையுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
புதிதாக எந்த ஸ்மார்ட்ஃபோன்கள் சந்தைக்கு வந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்களுக்கென உலகளவில் கவனம் உண்டு.
இருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் சில காலமாக சார்ஜர் வழங்கமால் தன் ஐபோன்களை விற்பனை செய்து வருகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் மின்னணு கழிவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சார்ஜர் அடாப்டரை ஐஃபோனுடன் விற்காமல் இருக்கிறோம் என ஆப்பிள் நிறுவனம் கூறிவருகிறது.
இந்நிலையில், பிரேசில் நாட்டில் சார்ஜர் இல்லாமல் ஐஃபோனை விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தடை மீறி சார்ஜர் இல்லாமல் ஐஃபோன் 13-யை ஆப்பிள் நிறுவனம் அந்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இதனால், பிரேசில் சிவில் நீதிமன்றம் தடையை மீறியதற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு 2 கோடி டாலர்(ரூ.165 கோடி) அபராதம் விதித்துள்ளது. மேலும், பிரேசிலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐஃபோன் 12, ஐஃபோன் 13 ரகங்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு சார்ஜர் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு: எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!

21,000 ஊழியா்களை பணிநீக்கம் செய்த ஆரக்கிள்!
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின் டிரைலர்!
பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை! இன்றைய செய்திகள் ஜூன் 23 - நேரலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



