கரோனா எங்கே உருவானது.. இன்னுமா இந்த விவாதம் நடக்கிறது?

இன்னமும் கரோனா எங்கே உருவானது என்ற விவாதங்கள் மட்டுமே விஸ்வரூபம் எடுக்கிறதே தவிர, அதற்கான ஆதாரங்கள் மட்டும் பலவீனமாகவே உள்ளன.
கரோனா எங்கே உருவானது.. இன்னுமா இந்த விவாதம் நடக்கிறது?
கரோனா எங்கே உருவானது.. இன்னுமா இந்த விவாதம் நடக்கிறது?


லண்டன்: உலகை கரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கத் தொடங்கி மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்னமும் கரோனா எங்கே உருவானது என்ற விவாதங்கள் மட்டுமே விஸ்வரூபம் எடுக்கிறதே தவிர, அதற்கான ஆதாரங்கள் மட்டும் பலவீனமாகவே உள்ளன.

ஆரம்பகட்ட ஆய்வுகள் சீனத்தின் வூஹான் ஆய்வுக் கூடத்தில் நடந்த ஆராய்ச்சியினபோது ஏற்பட்ட கசிவுதான் காரணம் என்று கூறப்பட்டன.

ஆனால், இதனை மறுக்கும் வகையில் ஏராளமான அறிவியல் ஆராய்ச்சிகள், இது வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி, சீனாவை வெகுவாகக் காப்பாற்றியிருந்தார்கள்.

இது இப்படியிருக்க, இந்த தேதி வரை கரோனா வைரஸ் வௌவால்கள் அல்லது இன்னபிற விலங்குகளிடம் காணப்பட்டதற்கான ஆதாரங்களையும் யாரும் கொடுக்கவில்லை.

அண்மையில் நடந்த பதிப்புக்கு முந்தைய (இன்னும் மதிப்பிடப்படாத) ஆய்வு முடிவில், கரோனா மரபணுவில் அசாதாரணமான வரிசை முறைகளை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அசாதாரண வரிசை முறைகளின்படி, இது ஆய்வுக் கூடத்தில் திருத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட மரபணு வரிசை கொண்ட வைரஸ் என்பதை உறுதி செய்யும் வகையில்  உள்ளது.

இந்த நவீன உலகில் வைரஸ்களை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்த மாட்டார்கள் என்றும், அதனை அதிகளவில் உற்பத்தி செய்தி உலக நாடுகளில் பரவவிடுவதும் கடினமானது என்றும் நம்பப்படுகிறது மற்றும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வு முடிவுக்கு பல்வேறு விதமான கருத்துகள் வந்துள்ளன.  
கிடைக்கக் கூடிய ஆதாரங்கள் பலவீனமாக இருந்த போதிலும், வைரஸ் தோற்றம் பற்றி விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் மிக உறுதியான கருத்துகளையே கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com