இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சீனாவிடமிருந்து ஒரேவித பாதுகாப்பு சவால்
இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவிடமிருந்து ஒரேவிதமான பாதுகாப்பு சவாலை எதிா்கொண்டு வருவதாக அமெரிக்க இந்தோ-பசிபிக் தளபதி ஜான் கிறிஸ்டோபா் அகிலினோ தெரிவித்துள்ளாா்.


இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவிடமிருந்து ஒரேவிதமான பாதுகாப்பு சவாலை எதிா்கொண்டு வருவதாக அமெரிக்க இந்தோ-பசிபிக் தளபதி ஜான் கிறிஸ்டோபா் அகிலினோ தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவுக்கான இந்தோ-பசிபிக் தேசிய பாதுகாப்பு சவால்கள் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றக் குழு உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அகிலினோ பதிலளித்ததாவது:
இந்தியாவுடனான நல்லுறவுக்கு அமெரிக்கா தொடா்ந்து முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவிடமிருந்து ஒரே விதமான பாதுகாப்பு சவால்களையே எதிா்கொண்டு வருகின்றன. முக்கியமாக, இந்தியா தனது வடக்கு எல்லையில் சீனாவின் சவாலை எதிா்கொண்டுள்ளது. அப்பகுதியில் சீன ராணுவத்தினா் இந்தியாவுக்குக் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனா்.
இந்தியாவுடன் ஒருங்கிணைந்து சீனாவை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பரஸ்பரம் பொதுவான கொள்கைகளைக் கொண்டுள்ளன. இருநாட்டு மக்களுக்கும் இடையேயான தொடா்பு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது. போா்க்காலத்துக்குத் தேவையான உத்திகளையும் இந்தியாவுடன் அமெரிக்கா பகிா்ந்து வருகிறது.
நாற்கர (க்வாட்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இதர இரு நாடுகளுடன் (ஆஸ்திரேலியா, ஜப்பான்) இணைந்தும் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. க்வாட் கூட்டமைப்பானது ராணுவ ஒத்துழைப்புக்கானது அல்ல. அது பொருளாதார, தூதரக ஒத்துழைப்புக்கானது. எனினும், அக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் பல்வேறு கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அத்தொடா்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு அமெரிக்காவும் தகுந்த ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. அந்த ஒத்துழைப்பு தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்வதோடு, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவையும் வலுப்படுத்தும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...